மேலும் செய்திகள்
வழிப்பறி திருடன் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
30-Oct-2024
வீடு புகுந்து தம்பதியை தாக்கியரவுடி மீது பாய்ந்தது 'குண்டாஸ்'வீரபாண்டி, நவ. 10-ஆட்டையாம்பட்டி அருகே வண்டுக்காடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 27. இவர், கடந்த அக்., 21ல், சின்ன சீரகாபாடியை சேர்ந்த அய்யனார், 45, என்பவரிடம் தகராறு செய்து அவரது தோள்பட்டையில் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.அதேபோல் ஆக., 14ல் ஆட்டையாம்பட்டி பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது கர்ப்பிணி மனைவியையும் தாக்கி கொல்ல முயன்றதோடு, தடுக்க முயன்ற போலீஸ்காரர்களையும் தாக்கி பணிபுரிய விடாமல் தடுத்த வழக்கு, சக்கரவர்த்தி மீது உள்ளது. இதனால் சக்கரவர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, ஆட்டையாம்பட்டி போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, சேலம் டி.ஐ.ஜி.,யான, மாநகர கமிஷனர்(பொ) உமா நேற்று உத்தரவிட்டார்.
30-Oct-2024