உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

நீதிமன்றத்தில் வக்கீல் சரண்

நீதிமன்றத்தில் வக்கீல் சரண் சேலம், டிச. 19-சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த அப்சல், வழிப்பறி வழக்கில் கைதாகி, 7 ஆண்டு சிறை தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, கடந்த, 13ல் வக்கீல் முருகன், 47, பார்க்க வந்தார். அப்போது அவர், கஞ்சா, சிம் கார்டு ஆகியவற்றை அப்சலிடம் கொடுத்ததாக, சிறை நிர்வாகிகள், கண்காணிப்பு கேமரா பதிவுடன், அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் முருகன், நேற்று ஜே.எம்.எண்: 3ல் சரண் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !