உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மத்திய அமைச்சரை கண்டித்து வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 21-அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து, சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கம் சார்பில், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் இமயவர்மன் தலைமை வகித்தார்.அதில் திரளானோர், அம்பேத்கர் உருவ படத்தை கையில் ஏந்தி, அமித் ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் உள்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை விடுத்தனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.தேசிய பாதுகாப்பு சட்டம்அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். அதில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், அமித் ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது தேசிய பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அமித்ஷாவை கைது செய்ய கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.அதேபோல் காங்., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கட்சியினர், ஜலகண்டாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர். அதேபோல் நங்கவள்ளியில் கம்யூ., கட்சி சார்பில், ஒன்றிய துணை செயலர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓமலுாரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் அப்துல்ஹக்கீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கம்யூ., நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வாழப்பாடி ரயில்வே கேட்டில், வி.சி., - காங்., கட்சியினர், ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். காலை, 11:20க்கு விருதாசலம் நோக்கி சென்ற பயணியர் ரயிலை மறித்து, கண்டன கோஷம் எழுப்பினர். வாழப்பாடி போலீசார் மறியலில் ஈடுபட்ட, 30 பேரை கைது செய்து சிறிது நேரத்தில் விடுவித்தனர். அதேபோல் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில் வி.சி., சார்பில், அமித் ஷா உருவப்படம் எரிக்கப்பட்டு சாலை மறியல் நடந்தது. ஏத்தாப்பூரிலும், வி.சி., கட்சியினர், அமித் ஷா படத்தை எரித்து போராட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை