விவசாயி கொலை மிரட்டல் வக்கீலின் மனைவி புகார்
மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி அருகே மணியாரன்காட்டை சேர்ந்த, வக்கீல் துரைசாமி, 40. இவரது மனைவி மீனா, 31. இவர்கள் வீடு அருகே, 5 பனை மரங்கள் உள்ளன. அதில் பழுத்த பழங்கள், அடிக்கடி விழுவதால், துரைசாமியின் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என எண்ணி, பனம்பழங்களை, துரைசாமி வெட்டி அகற்றினார். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த, விவசாயி பழனிசாமி, 62, நேற்று முன்தினம் மாலை, மீனாவிடம் கேட்டார். அப்போது அரிவாளுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக, நேற்று மீனா அளித்த புகார்படி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.