மழையில் மின்தடை தவிர்க்க பராமரிப்பு
வாழப்பாடி:வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 11ல் மழையால், 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து, 14ல், 4 மணி நேரம், 18ல் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து, நம் நாளிதழில், 19ல் செய்தி வெளியானது. இதையடுத்து மழையின்போது மின்தடையை தவிர்க்க, வாழப்பாடி, பேளூர் பகுதிகளில் நேற்று காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை மின்கம்பி மீதுள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், 2:30 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.