உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ.,விடம் தீர்வு காண மல்லுார் மக்கள் வலியுறுத்தல்

நெரிசலில் சிக்கிய எம்.எல்.ஏ.,விடம் தீர்வு காண மல்லுார் மக்கள் வலியுறுத்தல்

பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே செல்கிறது. அதில் மல்லுார் பிரிவில் மேம்பால கட்டுமானப்பணி நடக்கிறது. நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்-டங்களில் இருந்து, சேலம் வரும் பிரதான சாலை மூடப்பட்டது. சர்வீஸ் சாலையும் இல்லை. இதனால் சேலம் செல்லும் வாக-னங்கள், மல்லுார் டவுன் வழியே திருப்பி விடப்பட்டது. அங்கு சாலை குறுகலாக உள்ளதால், காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து, நேற்று காரில் மல்லுார் வந்தார். அவரது காரும் நெரிசலில் சிக்கியது. இதனால் இறங்கிய அவர், 'காபி பார்' சென்றார்.அப்போது மக்கள், 'வாகனங்கள் செல்வதற்கு, நெடுஞ்சா-லையில் சர்வீஸ் சாலை போட்ட பின், பாலப்பணியை தொடங்கி இருக்க வேண்டும். சர்வீஸ் சாலை போடாமல், ஊருக்குள் திருப்பி விட்டதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகி-றது. பள்ளி மாணவ, மாணவியர், மக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியவில்லை. சாலையை கடக்கவும் முடியவில்லை' என, தெரிவித்தனர்.அதற்கு எம்.எல்.ஏ., 'சர்வீஸ் சாலை பணிக்கு நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகளிடம் பேசுகிறேன்' என்றார். அப்போது, மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் பழனிவேலு, ஊராட்சி முன்னாள் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி