மேலும் செய்திகள்
2 பேருக்கு குண்டாஸ்
12-Apr-2025
சேலம்:சேலம், அழகாபுரம் அருகே அழகர் நகரை சேர்ந்தவர் செல்வமுத்து, 65. இவர், 4 ரோட்டில் மருந்து கடை வைத்துள்ளார். கடந்த, 23ல் கடையில் இருந்து, 44,000 ரூபாயை எடுத்துக்கொண்டு, இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அழகாபுரம் முதல் தெரு அருகே சென்றபோது, மர்ம நபர்கள், 3 பேர், செல்லமுத்துவிடம் பேசினர். அப்போது, அவர்கள் இரு சக்கர வாகனத்தில் மாட்டியிருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். அதிர்ச்சியடைந்த செல்லமுத்து, அழகாபுரம் போலீசில் புகார் அளித்தார். 'சிசிடிவி' பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்த சந்தோஷ், 22, அவரது நண்பர்கள் என தெரிந்தது. அதில் நேற்று முன்தினம், சந்தோைஷ கைது செய்த போலீசார், மற்ற இருவரை தேடுகின்றனர்.
12-Apr-2025