ரூ.40,000 திருடியவர் கைது
ஓமலுார், ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோபி, 33. அதே பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். கடந்த, 7ல் ஓட்டலை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது கல்லா பெட்டியில் இருந்த, 40,000 ரூபாய் பணம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து கோபி புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 35, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.