உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மேட்டூர், கொளத்துார், கோவிந்தபாடி அடுத்த செட்டிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார், 43. மனைவி பூங்கொடி, 34. தம்பதியருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு சிவகுமார், கோவிந்தபாடி மாரியம்மன் கோவில் அருகிலுள்ள வேப்பமரத்தில் இருந்து, பா.ம.க., கட்சி கொடியை அகற்ற முயன்றார். அப்போது கால் தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்த சிவகுமார், சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் மாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார்.கொளத்துார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை