உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கிருஷ்ணகிரியில் சுற்றிவளைப்பு

திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கிருஷ்ணகிரியில் சுற்றிவளைப்பு

ஆத்துார், கடலுார் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் ராம்குமார், 35. இவர், சேலம் மாவட்டம் கெங்கவல்லி, ஆணையாம்பட்டியில், வீட்டின் பூட்டை உடைத்து, 8 பவுன் திருடிய வழக்கில், போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வந்த அவர், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த ஜூன், 16ல், ராம்குமாருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி நகர போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை, அங்குள்ள போலீசார் சந்தேகப்பட்டு விசாரித்தனர். அதில் திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து அழைத்து வந்து, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் மோகனசுந்தரம் விசாரித்து, ராம்குமாரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.6 மாதத்துக்கு பின் சிக்கினார்சேலம், அன்னதானப்பட்டி ரங்கசாமி வளாகத்தை சேர்ந்தவர் கார்த்தி, 20. இவர் கடந்த மே, 5ல், அன்னதானப்பட்டியில் பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் வந்த அவர், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். நீதிபதி, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில், 6 மாதங்களுக்கு பின் அவரை, செவ்வாய்ப்பேட்டை போலீசார், நேற்று அவரது வீட்டில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ