மேலும் செய்திகள்
காவிரியாற்றில் மூழ்கி கூலி தொழிலாளி சாவு
24-Sep-2024
ஆத்துார், அக். 22-சிறுமியை திருமணம் செய்த கணவர் உள்பட நான்கு பேர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து, ஆத்துார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு கடந்த, 9ல், சேலம் மாவட்டம், ஆத்துார் முல்லைவாடியை சேர்ந்த மணிவேல் மகன் லோகநாதன், 27, என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமிக்கு திருமணம் செய்துள்ளதாக, சேலம் கலெக்டருக்கு புகார் சென்றது.அவரது உத்தரவுபடி, ஆத்துார் சமூக நல அலுவலர் மனோரஞ்சிதம் அளித்த புகார்படி, கணவர் லோகநாதன், 27, மாமனார் மணிவேல், 49, மாமியார் கொளஞ்சி, 45, சிறுமியின் தாய் ராணி, 46, ஆகிய நான்கு பேர் மீது, குழந்தை திருமணம், போக்சோ ஆகிய பிரிவுகளில், நேற்று ஆத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Sep-2024