ரூ.1,000 வழங்கக்கோரிதே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
இடைப்பாடி,: தே.மு.தி.க.,வின், சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். அதில் அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் தங்கமணி, ஒன்றிய செயலர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.