உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் 105 பேருக்கு மருத்துவ சான்றிதழ்

சேலத்தில் இருந்து ஹஜ் பயணம் 105 பேருக்கு மருத்துவ சான்றிதழ்

சேலம்:சேலத்தில் இருந்து, ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கான தடுப்பூசி முகாம், சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டடத்தில் உள்ள, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை துணை இயக்குனர் சவுண்டாம்மாள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் போலியோ சொட்டு மருந்து, மினிகோ கார்பெட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முடிவில், 105 பேருக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை