தி.மு.க.,வை கண்டித்து கூட்டம்
மேட்டூர்: தி.மு.க., அரசை கண்டித்து, மேட்டூர் சட்ட சபை தொகுதிக்குட்பட்ட சிந்தாமணியூரில், அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாணவரணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட மாணவரணி செயலர் கவுசிக்ராஜ் தலைமை வகித்தார். மேச்சேரி கிழக்கு ஒன்றிய செயலர் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். அதில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்தியது; கல்வி கடன், 'நீட்' தேர்வை ரத்து செய்யவில்லை; மாணவியருக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறி, போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாணவரணி செயலர் ராமச்சந்திரன் பேசினர். மேட்டூர் சட்டசபை தொகுதி நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.