உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணை நீர்வரத்து உயர்வு

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த ஜூலை, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. பின் கர்நாடகா அணைகள், நீர்திறப்பை குறைந்த நிலையில் மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு அதிகரித்தது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது.இந்நிலையில் நேற்று முன்தினம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், வினாடிக்கு, 3284 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 12,763 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், 95.30 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 95.08 அடியாக சற்று சரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை