மேலும் செய்திகள்
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
23-Sep-2025
சேலம்: தமிழக விவசாயிகள் நாராயணசாமி நாயுடு சங்கம் சார்பில், சேலம், அரியானுாரில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதுகுறித்து மாநில தலைவர் வேலுசாமி கூறியதாவது:ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பசும்பால் லிட்டருக்கு, 38 ரூபாய், எருமைப்பால் லிட்டருக்கு, 48 ரூபாய் வழங்கப்படுகிறது. கால்நடை தீவன விலை ஏற்றம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வழங்கப்படும் விலையில் இருந்து லிட்டருக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளோம். அதன்படி வழங்காவிட்டால், வரும், 22ல் தமிழகம் முழுதும், பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அன்று முதல், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.
23-Sep-2025