மா.திறனாளிக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்
ஓமலுார் :ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சமுதாயக்கூடத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் முகாம் நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சந்திரகுமார் தலைமை வகித்தார். அதில் பல்வேறு துறைகள் சார்ந்த விண்ணப்பங்கள் பெற தனித்தனியே, 'ஸ்டால்' அமைக்கப்பட்டிருந்தது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், 1,320 மனுக்கள் பெறப்பட்டன.கலெக்டர் பிருந்தாதேவி, தாசில்தார் ரவிக்குமார், டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, ஒன்றிய செயலர் ரமேஷ், நகர செயலர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.