ரயில்கள் இயக்கத்தில் 22, 26ல் சிறு மாற்றம்
சேலம்; சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்கள் இயக்கத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: வரும், 22, 26ல், போத்தனுார் ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணி நடக்க உள்ளது. அந்த நாட்களில் காலை, 6:00 மணிக்கு புறப்படும், கண்ணுார் - கோவை எக்ஸ்பிரஸ், பாலக்காடு வரை இயக்கப்படும். பாலக்காடு முதல் கோவை வரை ரத்து செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் மதியம், 1:05க்கு கிளம்பும் மேட்டுப்பாளையம் - போத்தனுார் பயணியர் ரயில், கோவை ஜங்ஷனில் நிறுத்தப்படும். கோவை முதல் போத்தனுார் வரை ரத்து செய்யப்படும். மதியம், 2:30க்கு புறப்பட வேண்டிய கோவை - மதுரை எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சியில் இருந்து, 3:30க்கு கிளம்பும். கோவை முதல் பொள்ளாச்சி வரை ரத்து செய்யப்படும். மதியம், 3:30க்கு புறப்படும் போத்தனுார் - மேட்டுப்பாளையம் பயணியர் ரயில், கோவையில் இருந்து கிளம்பும்.