பயணியர் நிழற்கூடம் எம்.எல்.ஏ., திறப்பு
ஆத்துார், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் கோவில் எதிரே உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் கட்ட, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். தொடர்ந்து அங்கு பணி நடந்து முடிந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நிழற்கூடத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து பெத்தநாயக்கன்பாளையம், காந்தி நகரில், 15.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தனர்.