உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பார்வையற்றோருக்கு நவீன பாதை; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு

பார்வையற்றோருக்கு நவீன பாதை; கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்படுகிறது. அங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், மனு கொடுக்க வந்து செல்கின்றனர். குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவர்கள், சிரமமின்றி வந்து செல்லும்படி, அங்கு நவீன பாதை அமைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பார்வையற்றோர், தடையின்றி வந்து செல்ல, 7.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக உள் நுழைவாயில் பகுதியில் உள்ள சாய்வு நடைபாதையில் இருந்து, மின்துாக்கி, கலெக்டர் அலுவலக அறை, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் அறை வரை, 500 முதல், 600 சதுர அடி வரை, பிளாஸ்டிக் முறையில், 'டைல்ஸ்' ஒட்டப்படுகிறது. இதில் நேராக செல்வதற்கு கோடு, நின்று சரியான இடத்துக்கு செல்ல, புள்ளி வடிவில், டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல் மின்துாக்கி பகுதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செல்லும், 400 சதுர அடி பாதைக்கு டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிந்து, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை