மேலும் செய்திகள்
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் பூஜை
19-Oct-2025
ஆத்துார், ஆத்துார் கைலாசநாதர் கோவிலில், நேற்று சோமவார பிரதோஷ பூஜையையொட்டி, மூலவர் கைலாசநாதர், நந்தி பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், நெய், சந்தனம், தேன் உள்பட 16 வகையான அபி ேஷகங்கள் செய்யப்பட்டன.மாலை, 5:30 மணியளவில், கைலாசநாதர் ரிஷப வாகனத்தில், கோவிலை சுற்றி திருவீதி உலா வந்தார். கைலாசநாதர், நந்தி பகவான் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.அதேபோல், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், ஆத்துார் வெள்ளைபிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், தம்மம்பட்டி காசி விஸ்வநாதர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சோமவார பிரதோஷ பூஜை செய்யப்பட்டது. * தாரமங்கலம், கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் நேற்று நடந்தது. இதில் கோவிலில் மாலை 5 மணிக்கு மகா மண்டப நந்தி பெருமானுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நந்திக்கு பூக்களால் அலங்காரம் செய்து, நட்சத்திர ஆரத்தி, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அரோகரா கோஷம் முழங்க நந்தி பெருமானை தரிசித்தனர். அதேபோல் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார், நாயகிக்கு, தீபாராதனை செய்து, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர் கோவிலில், சோமவார பிரதோஷத்தையொட்டி காசிவிஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பெண்கள் பிரதோஷ பாடல்களை பாடினர். உற்சவர் கோவிலினுள் வலம் வந்தது.அதேபோல், வாழப்பாடி அருகே, பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நந்தி பகவான், தான்தோன்றீஸ்வரருக்கு தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தன அபிஷேகம் நடைபெற்றது.
19-Oct-2025