உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

தறித்தொழிலாளி வீட்டில் பணம், நகை திருட்டு

சேலம், சேலம், கொண்டலாம்பட்டி, பாட்டம்மன் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 30. வீட்டில் தறித்தொழில் செய்கிறார். இவர், மனைவி, குழந்தைகளுடன், தீபாவளி பண்டிகைக்கு, தர்மபுரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல்போனது. இதனால் அங்கேயே தங்கி, குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து கவனித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை, அவரது வீட்டுக்கு சவுந்தர்ராஜன் வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த, இரண்டரை பவுன் நகை, 29,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை