மேலும் செய்திகள்
தேனீ கொட்டி 7 பேர் காயம்
04-Sep-2025
ஆத்துார்; மரக்கிளையை உலுக்கி, கூட்டில் இருந்த கதண்டுகளை குரங்கு ஒன்று கலைத்து விட, அவை விரட்டி விரட்டி கடித்ததில், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய, 15 பேர் காயம்அடைந்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல், சித்தேரியை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவரது மகன், நான்காம் வகுப்பு படிக்கும் சிவகார்த்திகேயன், 9. இவருக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாட, சித்தேரி, மேல்நாரியப்பனுாரை சேர்ந்த உறவினர்களுடன், முட்டல் ஏரிக்கு வந்தனர். அங்குள்ள ஏரி பூங்காவில் மா மரத்தின் கீழ், 'கேக்' வெட்ட ஏற்பாடு செய்தனர். அப்போது, மா மரத்தின் மீது ஏறிய குரங்குகள், மரத்தை உலுக்கியதில், மரத்தின் கூட்டில் இருந்து கலைந்த கதண்டுகள் அங்கிருந்தவர்களை விரட்டி கடித்தன. இதில், சிவகார்த்திகேயன், ஒரு வயது குழந்தை கவன், 5 மாத கர்ப்பிணி நதியா உட்பட 15 பேர் காயமடைந்தனர். ஆத்துார் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
04-Sep-2025