உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிகார மகனை அடித்து கொன்ற தாய் கைது

குடிகார மகனை அடித்து கொன்ற தாய் கைது

மகுடஞ்சாவடி; குடிகார மகனை அடித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே தங்காயூரில் வசிப்பவர் காளியம்மாள், 70; இவரது கணவர் பழனியப்பன், 75; இவர்கள் மகன் முத்துசாமி, 49; இவரது மனைவி கோவிந்தம்மாள், 30, மகன் கிரியாதவ், 10, மகள் நிவிந்திகா, 3. கோவிந்தம்மாள் ஆறு மாதங்களுக்கு முன், முத்துசாமியுடன் தகராறு செய்து, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். தந்தை பழனியப்பன், திருச்செங்கோட்டில் உள்ள மகள் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் வழக்கம்போல் முத்துசாமி குடித்துவிட்டு, தாய் காளியம்மாளை அடித்துள்ளார். பின், போதையில் வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்தார். காளியம்மாள் மண்வெட்டி கம்பால் முத்துசாமி தலையில் ஓங்கி அடித்தார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொங்காணபுரம் போலீசார், காளியம்மாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி