| ADDED : மே 30, 2024 07:20 AM
பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி அருகே ஏலக்கரட்டை சேர்ந்தவர் ராஜா, 27. கட்டட மேஸ்திரி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ரோஷினி, 22. இவர்களுக்கு, 3 ஆண்டுக்கு முன் திருமணமாகி மகன் நிதர்சன், 1, இருந்தான்.நேற்று ராஜா வேலைக்கு சென்ற நிலையில் ரோஷினி குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மாலை, 4:00 மணிக்கு மின்விசிறியில் துப்பட்டாவில் துாக்கிட்டு ரோஷினி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக குழந்தையை கொன்றுள்ளார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் சேலம் ஊரக டி.எஸ்.பி., அமல அட்வின் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பெற்றோர் சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் முழு விசாரணைக்கு பின் தான் விபரம் தெரியவரும்' என்றனர்.