உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ் ஏறிய விபத்து மகளை தொடர்ந்து தாயும் பலி

தனியார் பஸ் ஏறிய விபத்து மகளை தொடர்ந்து தாயும் பலி

சேலம், சேலம், கருப்பூர், தட்டாஞ்சாவடியை சேர்ந்த, சீனிவாசன் மனைவி தமிழ்செல்வி, 45. இவர், தாய் மாதேஸ்வரி, 65, என்பவருடன், நேற்று முன்தினம், கரும்பாலை அருகே நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியது. இதில் பைக்கில் வந்த, இரு வாலிபர்கள் உள்பட, 4 பேரும் சாலையில் விழுந்தனர்.அப்போது வேகமாக வந்த தனியார் பஸ், 4 பேர் மீதும் மோதியது. இதில் தமிழ்செல்வி உயிரிழந்தார். மாதேஸ்வரி, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.மேலும் பைக்கில் வந்த கார்த்தி, மருத்துவமனையில் உள்ளார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை