உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சின் அடியில் சிக்கிய மாநகராட்சி ஊழியர்

பஸ்சின் அடியில் சிக்கிய மாநகராட்சி ஊழியர்

சேலம் : சேலம், குகையை சேர்ந்தவர் சுப்ரமணி,49. இவர் மாநகராட்சியின், 46, 47வது வார்டுகளில் சுகாதார பணியாளராக பணிபுரிகிறார். நேற்று காலை, 8:30 மணிக்கு ஜூபிடர் மொபட்டில், மனைவி கமலா, 40, மகள் அக்ஷயா, 12, ஆகியோருடன், ஜங்ஷனில் நடந்த திருமணத்துக்கு புறப்பட்டார். பெரியார் மேம்பாலத்தில் சென்றபோது, பின்புறமாக வந்த கார், பைக்கின் முன்புறம் மோதியது. அதில் தனியார் கல்லுாரி பஸ்சில் பைக் சிக்கியது. சுப்ரமணி, பஸ் முன்புறம் மாட்டிக்கொண்டார். ஆனால் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது தலையில் அடிபடவில்லை. அதே நேரம் அவரின் இடது காலில் முறிவு ஏற்பட்டது. மனைவி, மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள், 3 பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தால், ஓமலுார் பிரதான சாலையில், 40 நிமிடங்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி