உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய அளவில் ஸ்டார்ட்-அப் மாநாடு

சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய அளவில் ஸ்டார்ட்-அப் மாநாடு

சேலம்: சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரியில், 'திங்க் சேலம் 2025' தலைப்பில் தேசிய அளவில், 'ஸ்டார்ட்அப்' மாநாடு, நேற்று நடந்தது. சோனா கல்வி நிறுவன துணைத்தலைவர் சொக்கு தலைமை வகித்தார். சோனா இன்குபேஷன் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார்.சோனா இன்குபேஷன் பவுண்டேஷன், சோனா நிறுவனம் இணைந்து நடத்திய மாநாடு, முதலீட்-டாளர்கள், 'ஸ்டார்ட்அப்'கள், கல்வி நிறுவனங்-களை ஒன்றிணைப்பதை நோக்கமாக கொண்டது. சிறப்பம்சமாக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின், இக்னிஷன் கிராண்ட் நிதி உதவி வழங்கப்பட்டது. பல்வேறு தலைப்புகளில், நிபுணர்களின் பேச்சுகள் இடம்பெற்றன.மாணவர்களுக்கு ஏ.ஐ., சிக்கல் தீர்க்கும் போட்டி, வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்திய அரசின், டி.பி.டி., மூத்த ஆலோசகர் ராவ், தலைமை விருந்தினராக பங்கேற்றார். துணைத்தலைவர், ஸ்டார்ட்அப் பிரிவு தலைவர் சிவகுமார் பழனிசாமி பேசினார். டொராண்டோ பல்க-லையின் மனநல மருத்துவ இணை பேராசிரியர் வெங்கட் பட், 'கனடாவின் சுகாதாரத்துறையில், ஏ.ஐ., தொழில்நுட்ப வாய்ப்பு, தொழில் முனைவு குறித்து பேசினார்.நிறைவாக சோனா கல்வி நிறுவன துணைத்த-லைவர் சொக்கு, அறிவியல், தொழில் நுட்பத்-துறை, என்.இ.ஏ.சி., தலைவர் ரமணன் ராமநாதன், டாக்டர் செந்தில்குமார் பேசினர். ஏற்பாட்டை, சோனா இன்குபேஷன் துறைத்தலைவர் சத்தியமூர்த்தி செய்திருந்தார். சோனா கலை கல்லுாரி முதல்வர் காதர் நவாஷ், கணினி அறிவியல் துறைத்தலைவர் சத்தியபாமா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை