உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

நவராத்திரி உற்சவம் இன்று தொடக்கம்

சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா இன்று தொடங்குகிறது. வரும், 13ல் முடிய உள்ள விழாவில் உற்வசமூர்த்தியான அம்மனுக்கு, காலை, 10:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ஆராதனை நடக்கிறது. பின் நவராத்திரி தொடங்கி, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து தங்க ரத புறப்பாடு நடக்கிறது. பின் அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாட்டை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்ட அறங்காவலர்கள் மேற்கொள்கின்றனர்.நவராத்திரியை முன்னிட்டு சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள அய்யப்ப பஜனை மண்டலி சார்பில் அதன் தர்மசாஸ்தா ஆசிரம வளாகத்தில் இன்று முதல் வரும், 12 வரை கொலு வைத்து காலை, மாலையில் சிறப்பு பூஜை நடக்க உள்ளது. இதில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.விழா தொடக்கம்சங்ககிரி வாசவி டிரஸ்ட், வாசவி மகிளா சபா சார்பில் அங்குள்ள வாசவி மஹாலில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நேற்று நடந்தன. கலசங்களை வைத்து வேள்வி பூஜைகளுடன் கொலு பொம்மைகளை வைத்து மகளிர் குழுவினர் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். இன்று முதல், வரும், 11 வரை நவராத்தி விழா நடக்கிறது. தினமும் மதியம், 12:00 முதல், 2:00 மணி; இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.ஆத்துார், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி முதல் நாளையொட்டி சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. 200க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து மகிஷாசூரமர்த்தினி அலங்கார அம்மனுடன் பூஜை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை