உள்ளூர் செய்திகள்

ஜங்ஷன் வெறிச்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமையிடமாக உள்ள சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வழியே தினமும், 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும், 'பிஸி'யாக காணப்படும். ஆனால் நேற்று வழக்கமான நாட்களை விட, மிக குறைந்த பயணியரே இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. அலுவலகங்கள், மொத்த விற்பனை கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டதால், பணிக்கு செல்வோர், வியாபாரத்துக்கு வருவோர் உள்ளிட்ட பலரும் பயணிக்காததால், ரயில்களிலும் பல்வேறு பெட்டிகள் காலியாக சென்றன. இதனால் ஜங்ஷன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, டாக்ஸிகளின் எண்ணிக்கையும் மிக குறைவாகவே இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை