உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நொச்சி, ஆடா தொடா கன்றுகள் இலவசம்

நொச்சி, ஆடா தொடா கன்றுகள் இலவசம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, பாரப்பட்டி ஊராட்சியில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், இயற்கை வேளாண் சாகுபடி குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்து, இயற்கை வேளாண் சாகுபடியின் முக்கியத்துவம், அதன் நன்மை குறித்து தெரிவித்தார்.மேலும் முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், இயற்கையான பூச்சி விரட்டி, இடுபொருட்கள் தயா-ரிக்க உதவும் நொச்சி, ஆடாதொடா கன்றுகள் தலா, 50 வீதம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்-படுகிறது என, தெரிவித்தார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, துணை வேளாண் அலுவலர் ராமு, வேளாண்துறை மூலம் செயல்படும் திட்டங்கள், மானி-யங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சங்கர், இயற்கை முறையில் பூச்சி நோய் கட்டுப்பாடு குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண் அலுவலர் வைர பெருமாள், மீன் அமிலம் குறித்து விளக்கினார். ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி