உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம், தமிழகத்தில் கடந்த, 16ல் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால், சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு, சேலம் மாநகர், மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக வாழப்பாடியில், 22 மி.மீ., மழை பதிவானது.அதேபோல் சங்ககிரி, 13.4, நத்தக்கரை, 13, ஆணைமடுவு, தம்மம்பட்டி தலா, 6, கெங்கவல்லி, 5, ஏற்காடு, 4.6, டேனிஷ்பேட்டை, 4, ஆத்துார், 3.6, ஓமலுார், 3, சேலத்தில், 2.3 மி.மீ., மழை பெய்துள்ளது.நேற்று காலை சூரியன் அறவே தலைகாட்டாத நிலையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை, 9:30 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை, மதியம், 1:30 மணி வரை நீடித்தது. அதேநிலை மாவட்டம் முழுதும் நீடித்தது. பின் மீண்டும், மழை விட்டுவிட்டு பெய்தது. மழையால் பூமி குளிர்ந்து இதமான காற்று வீசியது. மக்கள் நடமாட்டமும் குறைந்திருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், ஆங்காங்கே தான் சென்றபடி இருந்தனர். அரசு விடுமுறை என்பதால், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் நடமாட்டம் இல்லை. இதனால் இடைவிடாத மழையால் பாதிப்பு ஏதும் இல்லை.படகு சவாரி நிறுத்தம்தீபாவளிக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறையால், ஏற்காட்டுக்கு கணிசமான அளவில் சுற்றுலா பயணியர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று அதிகாலை முதல் கடும் பனி மூட்டத்துடன் மித மழை பெய்து. மாலை, 4:20 மணி வரை கொட்டியது. பனிமூட்டத்தால், 5 அடி தொலைவில் உள்ளது கூட தெரியாத நிலை ஏற்பட்டது. தோட்ட தொழிலாளர்கள், உள்ளூர் வியாபாரிகள், வீடுகளிலேயே முடங்கினர். சுற்றுலா பயணியரும், காட்சிமுனை, பூங்காக்களை சுற்றி பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக படகு இல்லத்தில், ஏரி முழுதும் தெரியாத சூழல் ஏற்பட்டு, படகுகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாலை, 4:20 மணிக்கு மழை குறைந்ததும் மோட்டார் படகுகள் மட்டும், 6:00 மணி வரை இயக்கப்பட்டது.ஆணைவாரியில் குளியல்ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் முடங்கினர். முட்டல் பகுதியில் உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில், மழையின்போதும் சுற்றுலா பயணியர் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல் வாழப்பாடி, காரிப்பட்டி, ஏத்தாப்பூர், மேட்டுப்பட்டி, வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை முதல் மாலை வரை இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.செவ்வாய் சந்தை 'வெறிச்'ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், செவ்வாயன்று கூடும் காய்கறி சந்தையில், 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்து மறுநாளான நேற்று, காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் சந்தை வளாகத்தில் குறைந்த வியாபாரிகள் மட்டும் கடைகளை அமைத்திருந்தனர். மக்களும் போதிய அளவில் வராததால், சந்தை வெறிச்சோடியது.தக்காளி விலை உயர்வுஉழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறுகையில், ''தக்காளி செடியில் பூக்கள், பிஞ்சுகளுடன் உள்ளன. சில இடங்களில், அறுவடைக்கு வந்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால், செடியில் தக்காளி அழுகும் சூழல் ஏற்படும். நேற்று முன்தினம், உழவர் சந்தையில் கிலோ தக்காளி, 20க்கு விற்றது. நேற்று, 26 ரூபாயாக உயர்ந்தது. மழையால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை