உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், சேலம், கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் ஏராளமான செவிலியர்கள், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.இதற்கு தலைமை வகித்து, மாநில செயலர் விஜயகலா பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில், 4,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், 230 செவிலியர்களுக்கு, 80 பேர் மட்டும் உள்ளனர். மீதி பணியிடங்களை, பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்ப வேண்டும். கிராம சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் ஊதியத்தில் இருந்து வாடகை பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !