உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

குப்பை கிடங்குஅமைக்க எதிர்ப்பு வாழப்பாடி, அக். 17-வாழப்பாடி அடுத்த, பேளூர் டவுன் பஞ்சாயத்து வேட்டைக்காரன் புதுார் பகுதியில், குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதுகுறித்து பேளூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் மணிவண்ணன் கூறுகையில்,'' வேட்டைக்காரன் புதுார் பகுதியில், டவுன் பஞ்சாயத்துக்கு உள்ள நிலத்தில், குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வீடுகள் ஏதுமில்லை. குறிப்பிட்ட ஒரு சிலரின் நிலம் அங்கு உள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இதை செய்து வருகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை