உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெளிநாட்டில் குடித்தனம் கணவருக்கு ஓராண்டு சிறை

வெளிநாட்டில் குடித்தனம் கணவருக்கு ஓராண்டு சிறை

சேலம்: மனைவிக்கு தெரியாமல் வெளிநாட்டில் குடும்பம் நடத்திய கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி, அசோக் நகரை சேர்ந்தவர் முஜீப் பாஷா, 50. இவரது மனைவி ஷகீலா, 43. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முஜீப் பாஷா பிலிப்பைன்ஸில் பணியில் இருந்து கொண்டு, இங்கு வந்து சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இங்கு வராததோடு, வழக்கமாக அனுப்பும் பணத்தையும் அனுப்பவில்லை.மேலும் பிலிப்பைன்ஸில் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக தெரியவந்ததால், அம்மாபேட்டை போலீசில் ஷகீலா புகார் அளித்தார். இதன்படி முஜீப் பாஷா, அவரது பெற்றோர், சகோதரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் முஜீப் பாஷாவுக்கு ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் மதிவாணன் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ