உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓங்காளியம்மன் தேரோட்டம் கோலாகலம்

ஓங்காளியம்மன் தேரோட்டம் கோலாகலம்

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பல்பாக்கியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓங்காளியம்மன், மகமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த ஜன., 18ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை, சக்தி கரகம், பொங்கல் விழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு மகமாரியம்மன் சிங்க, குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த ஓமலுார் ஒன்றிய செயலர் பாலசுப்ரமணியம், தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து கோவிலை சுற்றி இழுந்து வந்தனர். தொடர்ந்து, வண்டிவேடிக்கை, பூங்கரகம், அக்னி கரகம், அலகு குத்துதல், கலை நிகழ்ச்சி நடந்தன. இன்று மாலை, 4:00 மணிக்கு மகமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.குப்பூர் காளியம்மன்அதேபோல் ஓமலுார் அருகே சிக்கனம்பட்டியில் உள்ள குப்பூர் காளியம்மன் கோவிலில், கடந்த., 16ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அங்கும் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ