முதல்வர் கோப்பை விளையாட்டு நாளை வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:சேலம் மாவட்டத்தில், 2025ம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி பள்ளி, கல்லுாரி, பொதுபிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என ஐந்து பிரிவுகளில் ஆக., 22 முதல் செப்., 12 வரை நடத்தப்படவுள்ளது. 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள், 25 வயதுக்குட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, வளைகோள் பந்து, கைப்பந்து, டேபிள் டென்னீஸ், பால் பேட்மின்டன், வாலிபால், கிரிக்கெட், கபடி, சிலம்பம், நீச்சல், கேரம், செஸ், கோ-கோ போட்டிகளும்.15 முதல் 35 வயதுக்குட்பட்ட பொது பிரிவினருக்கு தடகளம், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம் மற்றும் சிலம்பம் போட்டி நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, வீல்சேர் மேசைபந்து, எரிபந்து, கபடி, தழுவிய கைப்பந்து ஆகிய போட்டி நடத்தப்படும்.அரசு ஊழியர்களுக்கு தடகளம், வாலிபால், இறகுப்பந்து, கபடி, செஸ், கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் https://cmtrophy.sdat.inஅல்லது https://sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் நாளைக்குள் (ஆக., 20) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும்.இவ்வாறு கூறியுள்ளார்.