பனமரத்துப்பட்டி: ஏழு ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைத்தால், பனமரத்-துப்பட்டியின் அடையாளம் மாறிவிடும். 10,000 ஏழை மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கும் என, ஒன்றியக்குழு கூட்டத்தில், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் தலைமையில் நேற்று நடந்-தது. கமிஷனர் கார்த்திகேயன், பி.டி.ஓ.,சுரேஷ், துணைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்-களில், தலைவர், துணைத்தலைவர் உள்பட 10 கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 95க்கும் மேற்பட்ட தீர்மா-னங்கள் நிறைவேற்றினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மோகன் பேசியதாவது:பன-மரத்துப்பட்டி ஒன்றியத்திலுள்ள நெய்க்காரப்பட்டி, அமானி-கொண்டலாம்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, கெஜ்-ஜல்நாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, தம்மநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகள், சேலம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அறிகிறோம். ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைத்தால், சொத்து வரி, குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடும். குப்பை வரி உள்ளிட்ட பல புதிய வரிகள் விதிக்கப்படும். ஊராட்-சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்-டத்தில், பயனடைந்து வரும் 10,000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களின் வேலை பறிபோய்விடும்.ஏழு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால், பனமரத்துப்-பட்டியின் அடையாளமே காணாமல் போய்விடும். ஊராட்சி மக்-களின் கருத்தை கேட்ட பின், முடிவு செய்ய வேண்டும். ஊராட்சி-களை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, தீர்மானம் நிறை-வேற்ற வேண்டும். இவ்வாறு பேசினார்.ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன் பேசியதாவது: ஊராட்சியை, மாநகராட்சியுடன் இணைப்பது சம்மந்தமாக, பஞ்., தலைவர்கள், ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஊராட்சி-களின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.