வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க உத்தரவு
சேலம், சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செட்டிச்சாவடியில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்தில், 'பயோ மைனிங்' முறையில் திடக்கழிவு மேலாண் செய்யும் பணியை, நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அஸ்தம்பட்டி மண்டலத்தில், துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது தினமும் காலையில், வீடுகள் தோறும் சென்று, மட்கும், மட்காத குப்பையை தரம்பிரித்து சேகரிக்க, துாய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை, தொடர்ந்து துாய்மைப்படுத்த அறிவுறுத்தினார்.