நெல் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனை
வீரபாண்டி: அங்கக வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் தொழில்நுட்-பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்-டுள்ளன.இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்-குனர் கார்த்திகாயினி அறிக்கை:வண்டல் மண், மணல் கலந்த களிமண் ஆகியவற்றில், அங்கக வேளாண்மை மூலம் நெல் சாகுபடி செய்வது சிறந்தது. 90 முதல், 110 நாட்களில் அறுவடை செய்யும் குறுகிய கால ரகத்துக்கு, ஒரு ஏக்கருக்கு, 24 கிலோ விதை தேவை. 110 முதல், 125 நாட்கள் வரை, மத்திய ரகம், 16 கிலோ விதை, 125 நாட்களுக்கு மேல் வளரும் நீண்டகால ரகத்துக்கு, 12 கிலோ விதை தேவை. செம்மை நெல் சாகுபடி என்றால், 3 கிலோ போதும். பல தானிய விதைப்பு செய்து மடக்கி உழுத பின், ஏக்கருக்கு, 7 டன் தொழு உரம் அல்லது மட்கிய கோழி எரு அல்லது 2 டன் மண்புழு உரம் அடியுரமாக இட வேண்டும்.அசோஸ்பைரில்லாம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ், பாக்டீ-ரியா, துத்தநாக பாக்டீரியா ஆகியவற்றை, ஏக்கருக்கு தலா, 200 மி.லி., உயிர் உரமாக இடலாம். ஒரு ஏக்கர் நெல் வயலில், 400 முதல், 500 கிலோ வரை அசோலா அல்லது நீல பச்சைப்பாசியை வளர்க்க முடியும். நெல் நடவு செய்த, 3ம் நாள் இதை வயலில் இட்டு களையெடுப்பின்போது நீரை வடிகட்டி மிதித்து விட வேண்டும்.ஏக்கருக்கு 25 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது 70 கிலோ மண்புழு உரம், 50 கிலோ எலும்புத்துாள் ஆகியவற்றை மேலுர-மாக இட வேண்டும். நடவு செய்த 3, 4வது வாரங்களில் களை எடுக்க வேண்டும். பயிர் துார் கட்டும் பருவம் அல்லது தண்டு உருளும் பருவத்தில், 3 சதவீத பஞ்சகாவ்யா தெளிக்க வேண்டும். பூ பூக்கும் பருவத்தில், 10 சதவீதம் புளித்த மோர் கரைசல் அல்-லது 3 சதவீத இளநீர் கரைசல் தெளிக்க வேண்டும். டிரைகோகி-ரம்மா ஜப்பானிக்கம் எனும் முட்டை ஒட்டுண்ணியை, 25, 40, 55வது நாட்களில் ஏக்கருக்கு, '2சிசி' அட்டைகளை வைக்கலாம். இதேபோல் விளக்கு பொறி ஏக்கருக்கு ஒன்று வீதம் வைக்கலாம்.