கட்டண கழிப்பறையால் இலவச கழிப்பிடத்துக்கு பூட்டு
ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்டில், 2016 - 17ல், அப்போதைய எம்.எல்.ஏ., வெற்றிவேல், தொகுதி மேம்பாட்டு நிதியில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. அது திறப்பு விழா நடத்தி, மறுநாளே பூட்டப்பட்டது. இதனால் தற்போது குழாய்கள், கதவுகள் சேதமாகி இருந்தன.இந்நிலையில் கடந்த பிப்., 22ல், அங்கு தினசரி காய்கறி சந்தை திறப்பு விழாவுக்கு அமைச்சர்கள் நேரு, ராஜேந்திரன் வந்ததால், அவர்கள் ஆய்வு செய்வர் என, கழிப்பிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டு, அன்று மட்டும் திறக்கப்பட்டது. பின் வழக்கம்போல் பூட்டப்பட்டது. இதனால் பயணியர் பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பயணியர் கூறுகையில், 'இலவச கழிப்பிடத்தை திறந்தால், அருகே உள்ள இரு கட்டண கழிப்பிடங்களை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு வருவாய் குறைந்துவிடும் என்பதாலேயே, இலவச கழிப்பிடத்தை பூட்டி வைத்துள்ளனர்' என்றனர்.இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் நளாயினியிடம் கேட்டபோது, ''கழிப்பிடத்தை பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்ட பின், மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,'' என்றார்.