உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி மோதி பெயின்டர் பலி

லாரி மோதி பெயின்டர் பலி

ஓமலுார், காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டையை சேர்ந்தவர் கவுதம், 20. டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு, பெயின்டராக வேலை செய்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு, தீவட்டிப்பட்டியில் இருந்து வீட்டுக்கு செல்ல, 'யமஹா ஆர்.15' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் புறப்பட்டார்.காடையாம்பட்டி, சந்தைப்பேட்டை அருகே சென்றபோது, செங்கல் சூளையில் இருந்து, 'சைகை' காட்டாமல், ரிவர்ஸில், வேகமாக பிரதான சாலைக்கு வந்த லாரி, கவுதம் ஓட்டிவந்த பைக் மீது மோதியது. சம்பவ இடத்தில் கவுதம் உயிரிழந்தார். அவரது சகோதரி கிருஷ்ணவேணி புகார்படி, லாரியை கைப்பற்றி, தப்பி ஓடிய டிரைவரை, தீவட்டிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.-----------------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ