உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எஸ்கலேட்டர் அமைத்ததில் சொதப்பல் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

எஸ்கலேட்டர் அமைத்ததில் சொதப்பல் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி

சேலம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில், வெளிப்புறமாக எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளதால், அங்கிருப்பது தெரியாமல் பயணிகள், படிகளில் ஏறியும், இறங்கியும் அவதிப்படுகின்றனர். திட்டமிட்டதில் ஏற்பட்ட சொதப்பல் காரணமாக, ரூ.2.5 கோடி வீணாகியுள்ளது. சேலத்தில் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டில், இட நெருக்கடியை தீர்க்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.96.53 கோடி மதிப்பில், இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 2023, ஜூனில் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில், 80 பஸ்கள் நிறுத்தக்கூடிய அளவுக்கு, இரு அடுக்குகளில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. ஜங்ஷன், தாரமங்கலம், ஓமலுார், இளம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, முதல் தளத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.முதல் தளம் செல்ல, ஆறு பேர் அளவுக்கு நிற்கக்கூடிய சிறிய அளவிலான இரண்டு லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் இயங்குவதில்லை. இதனால், முதியோர் படியேற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் ரூ.2.5 கோடி மதிப்பில், கடந்த ஆண்டு எஸ்கலேட்டர் அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் முடிவடைந்து, பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட பின்பும், படிகளில் ஏறி, இறங்கும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.ஏனெனில், எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டிருப்பது பயணிகள் யாருக்கும் தெரியாத அளவுக்கு, ஒதுக்குப்புறமாகவும், மறைவாகவும் உள்ளது. கோட்டை மாரியம்மன் பகுதியிலிருந்து வரும் பயணிகள் மட்டுமே எஸ்கலேட்டரை பயன்படுத்துகின்றனர். எஸ்கலேட்டர் வசதி பயன்பாட்டுக்கு வந்ததால், லிப்ட் இயக்கத்தில் மேலும் அலட்சியப்போக்கு அதிகரித்துள்ளது. ஒரு லிப்ட் மட்டும் அவ்வப்போது இயக்கப்படுகிறது. இதனால், வயதில் முதிய பயணிகள், வேதனையுடன் படிகளில் ஏறி இறங்குகின்றனர்.இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:எஸ்கலேட்டரை பயன்படுத்த வேண்டும் என்றால், பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே, 500 மீட்டர் வரை நடந்து வர வேண்டும். மேலும் எஸ்கலேட்டர் இருப்பது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், ரூ.2.5 கோடி மதிப்புள்ள எஸ்கலேட்டர் பயன்பாடில்லாமல் கிடக்கிறது. மாறாக பயணிகளின் அவதி இன்னும் தீர்ந்தபாடில்லை.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை