அடிப்படை வசதி கேட்டு மக்கள் சாலை மறியல்
ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துார் ஊராட்சி, அண்ணாமேட்டில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு சாலை சீர-மைக்கப்படவில்லை. குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி, அப்பகுதி மக்கள், நேற்று, அந்த வழியே வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.ஆத்துார் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பேச்சு நடத்-தினர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் மறியலை கைவிட்டனர்.