உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சீரான குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

சீரான குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

கெங்கவல்லி:கெங்கவல்லி, உலிபுரத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் போதிய குடிநீர் தொட்டிகள் அமைக்கக்கோரி, நேற்று காலை, 9:30 மணிக்கு, அப்பகுதி மக்கள், உலிபுரம் சாலையில், காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தம்மம்பட்டி போலீசார், பேச்சு நடத்தி, சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். காலை, 11:30 மணிக்கு மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை