உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி

குழாய் உடைந்து சீரழிந்த சாலையால் மக்கள் அவதி

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், குடிநீர் வடிகால் வாரிய மின் இறைப்பான் அறைஉள்ளது. அங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதில் காரிப்பட்டியில் இருந்து, அ.நா.மங்கலம் செல்லும் பிர-தான சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து, குடிநீர் வெளியேறியதோடு, சாலை சேதமடைந்து சேறு சகதியாக மாறி-யுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல், மக்கள் சிர-மப்பட்டு வருகின்றனர்.நேற்று அந்த வழியே சென்ற வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொண்-டன. அதேபோல், சாலை முழுதும் சேதம் அடைந்ததால், மக்கள் அந்த வழியில் செல்ல முடியாமல், சுற்றிச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன், குழாய் உடைப்பை சரிசெய்து சாலையை சீரமைத்துத்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி