உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலையை சீரமைக்கக்கோரி மறியலுக்கு முயன்ற மக்கள்

சாலையை சீரமைக்கக்கோரி மறியலுக்கு முயன்ற மக்கள்

சேலம் : சேலம், செவ்வாய்ப்பேட்டையில் மஜித் தெரு உள்பட பெரும்பாலான சாலைகளில், பாதாள சாக்கடை திட்டம், தனி குடிநீர் திட்டத்துக்கு தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. இதனால்மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மஜித் தெருவில், அப்பகுதி மக்கள், சாலை மறியலுக்கு முயன்றனர். இதை அறிந்து செவ்வாய்ப்பேட்டை போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் வந்து, பேச்சு நடத்தினர். அப்போது தேர்தல் முடிவு வெளியான பின் சாலையை சரிசெவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ