உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்

ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்து மக்கள் உண்ணாவிரத போராட்டம்

தலைவாசல், சிறுவாச்சூரில், கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத வருவாய்த்துறையினரை கண்டித்து, பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலைவாசல் அருகே, சிறுவாச்சூர் கிராமத்தில், மூப்பனார் கோவில் பகுதியையொட்டி உள்ள அரசு புறம்போக்கு இடத்தை, அப்பகுதியினர் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை அகற்றக்கோரி, கடந்த, 16ல், ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தி, ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினியிடம் மனு அளித்தனர்.அப்போது, ஆர்.டி.ஓ., 'இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். மறுநாள், தலைவாசல் தாசில்தார் பாலாஜி, சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அவரிடம், பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால், தாசில்தார் திரும்பிச் சென்றார்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வருவாய்த்துறையினர் ஆதரவாக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என கூறி நேற்று காலை, 9:00 மணி முதல், சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி