| ADDED : ஆக 22, 2024 03:49 AM
சேலம்: தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், 2ம் நிலை போலீஸ்காரர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், உயரம் சரியாக இருந்தவர்களுக்கு குறைவு என தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நடந்த வழக்கில் மீண்டும் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று, 445 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 217 பேர் பங்கேற்றனர். மேலும், முதல் நாள் வராத, 3 பேர் பங்கேற்றனர். அந்த, 270 பேருக்கும் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, 100, 200 மீ., ஓட்டம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. இந்ந இரு நாளில், 350 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கு இன்று, நாளை, நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. முன்னதாக உடற்தகுதி தேர்வை டி.ஐ.ஜி., உமா, மாநகர போலீஸ் தலைமையிட துணை கமிஷனர் கீதா உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் உடற்தகுதி தேர்வு, வீடியோ பதிவு செய்யப்பட்டது.