உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் இறந்த ஓய்வு எஸ்.எஸ்.ஐ.,க்கு போலீசார் அஞ்சலி

விபத்தில் இறந்த ஓய்வு எஸ்.எஸ்.ஐ.,க்கு போலீசார் அஞ்சலி

இடைப்பாடி, கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம், கோட்டைமேட்டை சேர்ந்தவர் கோபால், 62. போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,யாக இருந்த இவர், 2 ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவி கோமதி, மகள் பிரியதர்ஷினி, சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு போலீஸ் படையில் பணிபுரியும், மகன் அஜித்குமார் உள்ளனர்.நேற்று காலை, 9:30 மணிக்கு, கோபால், புதுப்பாளையத்தில் இருந்து மூலப்பாதைக்கு, சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் சென்றுகொண்டிருந்தார். அப்போது, 'இண்டிகா' கார் மோதியதில், கோபால் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார், தப்பி ஓடிய கார் டிரைவரை தேடுகின்றனர். இதையடுத்து கோபால் உடலுக்கு, கொங்கணாபுரம் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி